தமிழகத்தில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி கூறியுள்ள கருத்து தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இப்போது சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லும் திமுக பின்னர் மாரியம்மனும் அய்யனாரும் வேண்டாம் என்று சொல்லும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். நம் ஊரை காக்கும் தெய்வங்களை அழிப்பது தான் திமுகவின் குறிக்கோள் என்றும் திமுகவில் உள்ள ஏற்ற தாழ்வுகளை களையாமல் இந்து மத தர்மத்தை அழிப்போம் என்று சொன்னால் அதனை அனுமதிக்க முடியாது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.