திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நீட் மசோதாவுக்கு நான் கையெழுத்து போட மாட்டேன் என்று ஆளுநர் கூறிக் கொண்டிருக்கிறார். உண்மையா நாம் அதற்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறோம். இதுவரை அதிமுகவில் யாராவது ஒருத்தர், ஒரு கண்டனத்தை விடுங்க…  ஒரு மூச்சாவது விட்டு இருக்காங்களா ? ஆளுநரை எதிர்த்து…  உங்களுடைய தலைவி….  நீங்க எல்லாம் பெருமையா பேசுவிங்களே….  என்ன சொல்லுவாங்க ?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையாரை என்ன தெரியுமா சொல்லுவாங்க ? இரும்புப் பெண்மணி. அவரை தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கும் நீங்கள், ஒரு பித்தளை மனிதராகவாவது இருக்க வேண்டாமா ? ஒரு பிளாஸ்டிக் மனிதராகவாவது இருக்க வேண்டாமா ? மோடியும், அமித்ஷாவும் பிசைந்து வைத்திருக்கிற கல்லு மண்ணாகத்தான் இங்கே இருந்து கொண்டிருக்கிறார்கள் அதிமுகவினர்.

இதற்கெல்லாம் ஒரு விடிவு வர வேண்டும். நம்முடைய தலைவர் அவர்கள் ஏற்கனவே சொல்லி இருக்கிறார்….  அதேபோல அன்பு சகோதரர் திரு ராகுல் காந்தி அவர்களும் சொல்லியிருக்கிறார்…  காங்கிரஸ் ஆட்சி அமைந்தால்,  அவங்க சொல்றாங்க இல்ல… ”நீட் ரகசியம்” நீட் ரகசியத்தை,  உதயநிதி சொல்வாரா ? சொல்வாரா? என கேட்குறாங்களே… இப்ப சொல்றேன், அந்த ரகசியத்தை… வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை ஓட ஓட விரட்டுங்கள். பாஜகவை கீழே இறக்கி,  காங்கிரஸ் ஆட்சியை….  நம்முடைய கூட்டணி ஆட்சியை… உட்கார வச்சிங்கன்னா….  கண்டிப்பாக தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு ரத்தாகும்.

அருமை சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் அந்த வாக்குறுதியை கொடுத்திருக்கிறார். எனவே அதை நோக்கி நாம் பயணிப்போம். இந்த போராட்டம் இதோடு நிற்காது. அடுத்த போராட்டம் தலைவருடைய அனுமதி பெற்று,  டெல்லியில் நடத்தப்படும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.