நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காவேரியில் தண்ணி தர முடியாது என்கிறான்ல… பேச்சுவார்த்தைக்கு உடன்படல அவன். அந்த சிவகுமாரு…  அந்த சீத்தாராமையா எல்லாம் ரொம்ப பேசுறாங்க.  ரொம்ப பேசுறாங்க… தண்ணி தர முடியாது. இப்ப நீங்க என்ன சொல்லணும் ? எங்க மாநில முதலமைச்சர்…  மதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள்  என்ன சொல்லணும் ?

எனக்கு உரிய நதிநீரை பங்கீடு. அப்போதான் 2024 தேர்தலில் உனக்கு பங்கீடு, இடப்பங்கீடு. இல்லையென்றால் உன்னோடு கூட்டணி கிடையாதுடா..  போடா சிங்கமா சொல்லணும் இல்ல. அவன் மாநிலத்திற்காக… அவன் மாநில மக்களின் நலனுக்காக… அவன் நிற்கும் போது,  நீங்கள் உங்கள் மாநில மக்களின் நலனுக்காக நீங்கள் நிற்க வேண்டுமா ? வேண்டாமா ?

நான் திரும்பத் திரும்ப சொல்றேன். அவன தூக்கி வீசு. 31 லட்சம் சட்டசபையில் வச்சிருக்கேன். இப்ப எத்தனை லட்சம் என்று எனக்கே தெரியாது. நான் போட்டியில் இருந்து விலகிக் கொண்டு உங்களை ஆதரிக்கிறேன் என்கிற செல்கிறேன். எவனாவது சொல்வானா?  காங்கிரசை விட பெரிய கட்சி நானு. 110 வருஷம்.. 120 வருஷம் ஆரம்பிச்ச கட்சி. அத வச்சுட்டு நீ ஆடிட்டு இருக்க…

பல முறை ஆட்சியில் இருந்திருக்கிற…  கோடிக்கணக்கான பணம் வைத்திருக்கிற…  உன்னை விட பெரிய கட்சி நான்தான் என் ஸ்டேட்ல…  காங்கிரஸ் இத்தாலியில் இருக்கா ? நாம் தமிழர் இத்தாலியில் இருக்கு. அப்புறம் சும்மா ஏதாவது பேசிட்டு இருக்காத… நான் ஆதரிக்கும் போது… தூக்கி வீசிட்டு வா… தூக்கி வீசுங்க,  நான் சப்போர்ட் பண்ணாலன்னா… கேளுங்க. ஏன்னா உங்களுக்கு எனக்கு நடக்கிற சண்டை அண்ணன் தம்பி சண்டை, பங்காளி சண்டை. அதுல காங்கிரஸோ,  பிஜேபியோ வந்தா ஒடஞ்சிடும் மண்ட. இதுதான் என் கோட்பாடு என தெரிவித்தார்.