இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் ‘டாட்டூ’ (Tattoo) குத்திக் கொள்வது பெரும் மோகமாக இருந்து வருகிறது. ஆனால், வீட்டில் உள்ள பெரியவர்களுக்குத் தெரியாமல் டாட்டூ குத்திவிட்டு மாட்டிக்கொள்ளும் இளைஞர்களின் பாடு திண்டாட்டம்தான். அப்படி ஒரு சுவாரசியமான சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், இளம் பெண் ஒருவர் தனது கழுத்தில் ஸ்டைலாக டாட்டூ குத்திக் கொண்டு வீட்டிற்குத் திரும்புகிறார். வீட்டில் இருக்கும் தனது தாய் மற்றும் பாட்டியிடம் இருந்து இதை மறைக்க அவர் ஒரு தந்திரத்தைக் கையாள்கிறார். கழுத்தில் இருக்கும் டாட்டூ தெரியாமல் இருக்க, தனது கழுத்தை ஒரு பக்கமாகச் சாய்த்தபடி மிகவும் ‘கூல்’ ஆக அமர்ந்து பேசுகிறார்.

மகளின் இந்த விசித்திரமான அமர்வு நிலையைப் பார்த்த தாய்க்கு சந்தேகம் ஏற்படுகிறது. ஏதோ மறைக்கப்படுவதை உணர்ந்த தாய், மகளிடம் துருவித் துருவி விசாரணை நடத்துகிறார். இறுதியில், மகள் கழுத்தை மறைக்கக் காரணம் டாட்டூ தான் என்பது அம்பலமாகிறது.

தன்னிடம் சொல்லாமல் டாட்டூ குத்தியதால் ஆத்திரமடைந்த தாய், உடனே மகளுக்கு  பளார் விட்டார். சில நிமிடங்களுக்கு முன்பு வரை மிகவும் ஸ்டைலாக அமர்ந்திருந்த அந்தப் பெண், தாயின் அடியால் நிலைகுலைந்து போகிறார். பயத்தில் தனது பாட்டியின் உதவியை அவர் நாடினாலும், பாட்டியும் தாயின் பக்கமே நிற்கிறார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்: அம்மாவிடம் டாட்டூவைக் காட்டினால் இப்படித்தான் நடக்கும்” என ஒருவர் பதிவிட்டுள்ளார். “கூல் ஆக நினைக்கப்போய் கடைசியில் சூடான அடி வாங்கிவிட்டார்” என மற்றொருவர் கிண்டல் செய்துள்ளார். “பெரியவர்களுக்குத் தெரியாமல் இதுபோன்ற காரியங்களைச் செய்யக் கூடாது என்பதற்கு இதுவே பாடம்” எனப் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

வீட்டில் மறைத்துச் செய்யப்பட்ட ஒரு சிறிய விஷயம், இறுதியில் ஒரு குடும்ப காமெடியாக முடிந்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.