கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று அறிவித்துத் தொடர்ந்து பிரச்சனை செய்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் அமைதி காப்பதாக எதிர்க்கட்சிகள் சார்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிகவும் ஆவேசமாகவும் வெளிப்படையாகவும் உரையாற்றியுள்ளார்.
சட்டமன்றத்தில் விவாதத்தின் போது பேசிய முதலமைச்சர் விஜய், “1969-ல் சட்டமன்றத்தில் ஒரு விவாதம் நடந்துள்ளது. அப்போது தமிழக நீர்வளத்துறை அமைச்சராக இருந்தது யார்? ஏன் அணை கட்ட விட்டீர்கள் என்று பழசையெல்லாம் தோண்டித் துருவி நான் இப்போது கேள்வி கேட்க விரும்பவில்லை. மலிவான அரசியல் (Cheap Politics) செய்வதும் எங்கள் நோக்கம் இல்லை” என்று அழுத்தமாகக் கூறினார்.
. @TVKVijayHQ : சீப் பாலிடிக்ஸ் பண்ண விரும்பவில்லை ! 💥
• 1969ல் சட்டமன்றத்தில் ஒரு விவாதம் நடந்துள்ளது. அப்போது தமிழக நீர்வளத்துறை அமைச்சராக இருந்தது யார்? ஏன் அணை கட்ட விட்டீர்கள் என நான் கேட்க விரும்பவில்லை.
• அது எங்கள் நோக்கமும் இல்லை pic.twitter.com/xtxe2jqeGL
— Prakash Vijay (@PrakazVijay_Of) August 7, 2026
காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவுபடுத்திய அவர், எதிர்க்கட்சிகள் தன் மீது வைத்த விமர்சனங்களுக்குத் தனது சாட்டையடி பதிலால் முற்றுப்புள்ளி வைத்தார். முதலமைச்சர் விஜயின் இந்த அதிரடி பேச்சு சட்டமன்றத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
