கள்ள நோட்டு புழக்கம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் அளவில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பது  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2021 தேசிய குற்ற பிரிவு ஆவண விவரம் படி கள்ள நோட்டு புழக்கம் அதிகமாக உள்ளவற்றில் மேற்கு வங்காளத்தில் 82 வழக்குகளும், தமிழகத்தில் 62 வழக்குகளும், அசாமில் 75 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மகாராஷ்டிராவில் 55 வழக்குகளும், உத்தரப்பிரதேசத்தில் 42 வழக்குகளும், ராஜஸ்தானில் 54 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 இல் இந்தியா முழுவதும் 639 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும் அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் நேற்று ரூ.33 லட்சம் கள்ள நோட்டு வைத்திருந்த இரண்டு பேரை போலீசார்  கைது செய்துள்ளனர்.