பேருந்துகளில் மாணவர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் அறிவுரைகளை கேட்காமலோ? அல்லது கட்டுப்பாட்டை மீறினாலோ? ஓட்டுனர், நடத்துனர்கள் உடனடியாக பேருந்து நிறுத்திவிட்டு அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என போக்குவரத்து துறை ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யக்கூடாது.

அதேபோல் பேருந்துகளில் ஏறும்போதும் பயணம் செய்யும்போதும் மாணவர்கள் பாதுகாப்பான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் வழி காட்ட வேண்டும். பாதுகாப்பற்ற முறையில் மாணவர்கள் பயணம் செய்தால் பேருந்தை நிறுத்தி மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். அப்படி அறிவுரை கேட்காத மாணவர்கள் மீது போலீஸ் மாநகர போக்குவரத்து கழகத்திடம் டிரைவர் மற்றும் கண்டக்டர் புகார் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.