தமிழகத்தில் உள்ள மதுரை சிறையில் 1850 கைதிகள் உள்ளனர். இந்நிலையில் சிறை நிர்வாகம் இவர்களை நல்வழிப்படுத்துவதற்காக புத்தகம் படிக்க  ஊக்குவிக்கிறது. இதற்காக 2500 புத்தகங்களை சிறை  நிர்வாகம் சேகரித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று தொடங்கி வருகிற 19-ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில் பொதுமக்களிடமிருந்து புத்தகங்களை சேகரிக்க ஸ்டால் ஒன்றை சிறை நிர்வாகம் பெற்றுள்ளது.

இந்நிலையில் மதுரை சிறையில் டிஜிட்டல் நூலக திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை நேற்று டி.ஐ.ஜி பழனி தொடங்கி வைத்துள்ளார். இதில் கண்காணிப்பாளர் வசந்த கண்ணன் போன்றோர் உடன் இருந்தனர். இது சிறையில் உள்ள 52 டிவிகள் மூலமாக தினமும் காலை, மாலை வேளையில் ஒன்றரை மணி நேரம் பிரபலமான விருது பெற்ற நூல்களை ஒலி ஒளி வடிவில் படிக்கும் திட்டமாகும்.