கர்நாடக மாநிலம் பெலகாவியில் கள்ளக்காதல் விவகாரத்தில் தாய் திருந்துவதற்கு மறுத்ததால், ஆத்திரமடைந்த மகன் அவரது காதலனை 16 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் 42 வயதான பரசுராம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் தனது தாயுடன் பரசுராம் வைத்திருந்த கள்ளத்தொடர்பை பலமுறை கண்டித்தும் அவர் கேட்காததால், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற மகன் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். கொலையின் மிகவும் அதிர்ச்சிகரமான அம்சம் என்னவென்றால், பரசுராமை சரமாரியாகக் குத்திக் கொன்ற பிறகு, அந்த இளைஞன் தப்பி ஓடாமல் ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலத்தின் மீது ஏறி நின்று கொண்டு காவல்துறையினருக்காகக் காத்திருந்துள்ளார்.
இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தின் மீது நின்றிருந்த இளைஞனை உடனடியாகக் கைது செய்தனர். குடும்ப மானத்தைக் காக்கவே இந்தச் செயலில் ஈடுபட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
