மத்தியப் பிரதேச மாநிலம் மந்தசௌர் மாவட்டத்தில், பெற்ற தாயை அவரது ஒரே மகன் பேருந்து நிலையத்தில் தவிக்கவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், சமூக வலைதளங்களில் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மந்தசௌர் மாவட்டத்தைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவருக்கு ஒரே ஒரு மகன். மின்சாரத் துறையில் லைன்மேனாகப் பணியாற்றி வரும் இவரை, அவரது தாய் மிகுந்த சிரமங்களுக்கு இடையே படிக்க வைத்து ஆளாக்கியுள்ளார். இந்நிலையில், இன்று காலை சுமார் 10 மணியளவில் தனது தாயை பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்த மகன், அங்கேயே அவரைத் தனியாக விட்டுவிட்டுச் சென்றுள்ளார்.
குளிர் காற்று வீசும் அந்தப் பேருந்து நிலையத்தில், மக்கள் நடமாட்டத்திற்கு இடையே திக்குத் தெரியாமல் அமர்ந்திருந்த அந்த மூதாட்டி, மன வேதனையுடன் கதறி அழுத காட்சி காண்போர் நெஞ்சை உலுக்கியது.
80 साल की बूढ़ी को बस स्टेड लग छोड़ गया पोता
बेटा इकलौता है और लाइनमैन की नौकरी करता
उसको पढ़ाया लिखाया लेकिन वो बुढ़ापे में अपनी मां की देखभाल नहीं कर पा रहा
पत्नी और मां का झगड़ा हुआ तो पत्नी ने सासु को घर से निकाल देने का आदेश थमा दिया लाइनमैन पति को
फिर देखिए सोशल मीडिया… pic.twitter.com/cxc2a997KY
— sunita dhangar (@dhangarranglal2) February 3, 2026
குடும்பத்தில் ஏற்பட்ட மருமகள் – மாமியார் இடையேயான மோதலே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. மருமகள் கொடுத்த நெருக்கடியாலும், “உன் தாயை வீட்டில் வைத்திருக்கக் கூடாது” என்ற நிபந்தனையாலும், வேறு வழியின்றி அந்த மகன் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார். பெற்ற தாயை பராமரிக்கத் தவறிய மகனின் செயல் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னைக் கைவிட்ட மகனின் கொடுமை குறித்து அந்தத் தாய் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த பொதுமக்கள் பலரும் அந்த மகனுக்கு எதிராகத் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். அதாவது இது போன்ற குடும்பப் பிரச்சினைகளை நான்கு சுவர்களுக்குள் பேசித் தீர்க்க முடியாதா? இன்று “குடும்பம்” என்பது வெறும் பெயரளவில் மட்டுமே சுருங்கி வருகிறதா? பெற்ற பிள்ளையே பாரமாக நினைக்கும் நிலையில், முதியவர்களின் எதிர்காலம் என்னவாகும்? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் இது தொடர்பான வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
