இந்தியாவில் திருமண சீசன் களைகட்டியுள்ள நிலையில், மணமேடையில் அழகாகவும், ஒல்லியாகவும் தெரிய வேண்டும் என்பதற்காகப் பல இளம் மணப்பெண்களும், மணமகன்களும் விபரீதமான முடிவுகளை எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, உடற்பயிற்சி அல்லது உணவுக்கட்டுப்பாடு மூலம் எடையைக் குறைப்பதற்குப் பதிலாக, ‘மௌஞ்சாரோ’ (Mounjaro) போன்ற சர்க்கரை நோய்க்காகப் பயன்படுத்தப்படும் ஊசிகளைப் போட்டுக்கொண்டு மிகக் குறுகிய காலத்தில் எடையைக் குறைக்க முயல்கின்றனர்.
மருத்துவர்களின் முறையான ஆலோசனையின்றி, திருமணத்திற்காக எடுக்கப்படும் இந்த அதிரடி முடிவுகள் கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த ஊசிகளால் வாந்தி, மயக்கம், செரிமானக் கோளாறு முதல் கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பாதிப்புகள் வரை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்காலிக அழகுக்காகத் தங்களின் வாழ்நாள் ஆரோக்கியத்தையே பணயம் வைக்கும் இந்த மோகம், தற்போது இந்தியா முழுவதும் ஒரு ஆபத்தான டிரெண்டாக மாறி வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
