டாடா அறக்கட்டளையின் (Tata Trusts) துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த டிவிஎஸ் (TVS) குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன், தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ள சம்பவம் கார்ப்பரேட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாடா குழுமத்தின் முக்கிய முடிவுகளில் அதிகாரப் போட்டி நிலவி வருவதாகக் கூறப்படும் நிலையில், மெஹ்லி மிஸ்திரி தரப்பிலிருந்து எழுந்த சில சவால்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் காரணமாகவே வேணு சீனிவாசன் இந்த முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.
ரத்தன் டாடாவின் மிக நெருக்கமான மற்றும் நம்பிக்கைக்குரிய நபராகப் பார்க்கப்பட்ட வேணு சீனிவாசன், நிர்வாக ரீதியான சில அழுத்தங்கள் காரணமாகவே விலகியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் மிகப்பழைமையான மற்றும் மிகப்பெரிய அறக்கட்டளையான டாடா டிரஸ்டின் உயர்மட்ட நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் போக்கு, அடுத்தகட்டமாக அங்கு யார் செல்வாக்கு செலுத்துவார்கள் என்ற கேள்வியையும், விவாதத்தையும் தற்போது கிளப்பியுள்ளது.
