கர்நாடகா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 224 தொகுதிகளில் 171க்கான முன்னிலை விவரங்கள் தெரிய வந்துள்ளது.இதில்காங்கிரஸ் 100 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன. பாஜக லேசான பின்னடைவை சந்தித்தாலும், துரத்திக் கொண்டே செல்கிறது. பாஜக 99 தொகுதிகளிலும், மஜத 12 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. இதனால், பாஜக – காங்., இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில், மஜத 12 தொகுதிகளில் முன்னிலை பெற்றாலும், அக்கட்சியின் தலைவர் குமாரசாமி பின்னடைவை சந்தித்துள்ளார்.