கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்த பெருந்துயரச் சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், “கரூரில் நடந்த துயரச் சம்பவம் குறித்து எந்த ஒருவரையும் குற்றம் சாட்டி பலிகடாவாக ஆக்குவது நமது நோக்கம் அல்ல. ஆனால், அரசு மீது திட்டமிட்டு சிலர் பொய்யான தகவல்களை பரப்பும் நிலையில், உண்மையை வெளிக்கொணருவது அரசின் கடமை,” எனக் கூறியுள்ளார். மேலும், அந்த சம்பவத்தின் உண்மை நிலையை வெளிச்சம் போட அரசின் சார்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

“>

தொடர்ந்து, “இனி இத்தகைய துயரங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க ‘நிலையான வழிகாட்டு நெறிமுறைகள்’ (SOP) அரசு வகுத்து வருகிறது. மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்,” எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

“மனித உயிர்களே விலைமதிப்பற்றது என்பதைக் கருத்தில் கொண்டு, அனைத்துத் தரப்பினரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்,” என்ற அவரது பதிவுக்கு சமூக வலைத்தளங்களில் பரவலான வரவேற்பும், விவாதமும் எழுந்துள்ளது. #KarurStampede #KarurTragedy என்ற ஹாஷ்டேக்குகளுடன் வெளியிடப்பட்ட இந்தப் பதிவு தற்போது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.