தக்காளி சிவப்பு நிறம் என்பது அனைவருக்கும் தெரியும். பீகாரில் உள்ள கயா பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கருப்பு தக்காளியை பயிரிட்டு வருகிறார். இந்த கருப்பு தக்காளி அடுத்த ஆண்டு முதல் பெரிய அளவில் சந்தைக்கு கொண்டு வரப்படும். தற்போது இவற்றுக்கு சந்தையில் நல்ல கிராக்கி உள்ளது.

ஒரு கிலோ ரூ.100 முதல் 150 வரை விலைபோவதாக விவசாயி தெரிவித்தார். மேலும், இந்த தக்காளி சாகுபடி மூலம் ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்ட முடியும் என தெரிவித்தார். தற்போது, ​​வங்கம் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் அதிகளவில் பயிரிடப்படுகிறது.