சென்னை ஆவடி பகுதியில் ஃபியூஸ் கேரியர்களை நைசாக திருடிச் சென்ற வழக்கில், இன்று காலை இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக ஆவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவில் மின்தடை ஏற்படுவதும், பின்னர் மின்வாரிய ஊழியர்கள் வந்து பார்க்கும்போது அங்குள்ள ஃபியூஸ் கேரியர்கள் திருடப்பட்டிருப்பதும் தொடர்கதையாகி வந்தது.
பொதுமக்கள் இதனால் கடும் அவதிக்குள்ளான நிலையில், இந்த விவகாரம் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் அவர்களின் கவனத்திற்குச் சென்றது. இதையடுத்து, நள்ளிரவில் மர்ம நபர்கள் இருவர் பைக்கில் வந்து மிக லாவகமாக ஃபியூஸ் கேரியர்களை திருடிச் செல்லும் அதிர்ச்சி சிசிடிவி (CCTV) காட்சிகளை அமைச்சர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து பரபரப்பை கிளப்பினார்.
CCTV footage of stealing HRC fuses in various locations which caused repeated power cut in Kamaraj Nagar, Avadi.
Complaint given yesterday by our TNEB AE based on which FIR has been filled. pic.twitter.com/AkQOA5mc6K
— CTR.Nirmalkumar (@CTR_Nirmalkumar) June 9, 2026
“>
அமைச்சரே களத்தில் இறங்கி வீடியோவை வெளியிட்டதைத் தொடர்ந்து, உஷாரான ஆவடி தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் இன்று காலை அந்த இரண்டு கொள்ளையர்களையும் வளைத்துப் பிடித்து ஜெயிலில் தள்ளியுள்ளனர்.
