உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள ராம்லீலா மைதானத்தில், ‘மக்களுக்காக மக்கள் அரசு’ என்ற மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள், பாதாள சாக்கடைப் பிரச்சினை மற்றும் குண்டும் குழியுமான சாலைகள் குறித்துப் புகார் அளிக்க மக்கள் அங்கே திரண்டிருந்தனர். முகாம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு மாட்டு மந்தை திடீரென மைதானத்திற்குள் புகுந்தது. அதில் ஒரு முரட்டுச் காளை நேராக அதிகாரிகளின் ஸ்டால்களை நோக்கிப் பாய்ந்ததால், புகார்களைக் கேட்டுக்கொண்டிருந்த அதிகாரிகளும் ஊழியர்களும் உயிருக்குப் பயந்து நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அந்த இடமே கொஞ்ச நேரம் போர்க்களம் போலக் காட்சியளித்தது.

​சுவாரஸ்யம் என்னவென்றால், மக்கள் எந்தப் பிரச்சினையைத் தீர்க்கக் கோரி மனு கொடுக்க வந்தார்களோ, அதே மாடுகள் மூலம் அதிகாரிகளுக்கு ஆபத்து ஏற்பட்டதுதான். “தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்துகள் நடக்கிறது, நடவடிக்கை எடுங்கள்” என்று மக்கள் புகார் கொடுக்க வந்த இடத்தில், அதே மாடுகள் அதிகாரிகளையே விரட்டியது பெரும் வேடிக்கையாகப் பேசப்படுகிறது. இந்த முகாமில் சுமார் 441 பேர் பங்கேற்றாலும், முறையான அறிவிப்பு இல்லாததால் குறைவான மக்களே நேரடியாகப் புகார் அளிக்க முடிந்ததாகக் கூறப்படுகிறது. எது எப்படியோ, ‘மக்களின் பிரச்சினையை’ அதிகாரிகளுக்கு நேரில் காட்டிய அந்த மாடுகளின் செயல்தான் இப்போது உத்தரகாண்ட் முழுக்க ஹாட் டாபிக்