சமூக வலைதளங்களில் ஒரு விசித்திரமான திருட்டு வீடியோ வைரலாகி வருகிறது. பரபரப்பான காய்கறி சந்தையில் ஒரு வியாபாரி வியாபாரத்தில் மும்முரமாக இருக்க, ஒரு ஆசாமி நைசாக அவருக்குப் பின்னால் இருந்த ஒரு காய்கறிப் பையைத் திருடுகிறார். அந்தத் திருடன் அங்கிருந்து ஓடிவிடாமல், திருடிய அதே பையை மீண்டும் அதே வியாபாரியிடமே கொண்டு சென்று குறைந்த விலைக்குப் பேரம் பேசுகிறார். என்ன நடக்கிறது என்று தெரியாமல் அந்த வியாபாரியும் தனது சொந்தப் பையையே காசு கொடுத்து அவனிடமிருந்து வாங்கிக் கொள்கிறார்.

​சிறிது நேரம் கழித்து தனது கடையிலிருந்த காய்கறிப் பை காணாமல் போனதை உணர்ந்த வியாபாரி, அங்கும் இங்கும் தேடி பதறுவது பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், ஒரு நிமிடம் சிந்தித்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. திருடிய பொருளைத் திருடியவரிடமே விற்றுவிட்டுச் சென்ற அந்தத் திருடனின் துணிச்சலைப் பார்த்து நெட்டிசன்கள் மிரண்டு போயுள்ளனர். இந்த வீடியோ வேடிக்கையாகத் தெரிந்தாலும், பொது இடங்களில் வியாபாரிகளும் மக்களும் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு பாடமாக அமைந்துள்ளது.