இந்திய டி20 கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீதும், அவரது அணித் தேர்வுக் குறித்தும் பி.சி.சி.ஐ. (BCCI) நிர்வாகிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, நல்ல ஃபார்மில் இருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனைப் புறக்கணித்ததற்குக் கூட ஒரு காரணம் உள்ளது என்றும் (வரும் காலத்தில் கில்லை கேப்டனாக்கும் திட்டம்), ஆனால், திறமையானப் பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங்கை ஏன் தேவையில்லாமல் நீக்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியா மற்றும் ஆசியக் கோப்பை டி20 தொடர்களில், சிறந்த ஃபார்மில் இருந்த அர்ஷ்தீப் சிங்கை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக அதிக ரன்களை வாரி வழங்கிய ஹர்ஷித் ராணாவுக்குத் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்பட்டது.
இப்போதுத் திடீரென அர்ஷ்தீப் சிங்கைத் தென்னாப்பிரிக்கத் தொடரில் விளையாட வைக்கின்றனர். நீண்டப் புறக்கணிப்பிற்குப் பிறகு மீண்டும் வந்துள்ள அர்ஷ்தீப் சிங், முன்பு போலச் சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்துவீச முடியாமல் தடுமாறுவதாகவும், பவர் ப்ளேவுக்குப் பிறகுச் சொதப்புவதாகவும் பி.சி.சி.ஐ. நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
“என்ன மாதிரியான அணித் தேர்வு இது? ஃபார்மில் இருந்த அர்ஷ்தீப் சிங்கை ஏன் புறக்கணித்திருக்க வேண்டும்?” என்று பிசிசிஐ மீட்டிங்கில் கம்பீர் மீதுக் கடுமையாக அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாம். ஒருவேளை, தென்னாப்பிரிக்க டி20 தொடரை இந்தியா இழந்தால், கம்பீர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
