திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தலைவர் கலைஞர் அவர்கள் 1989 ஆம் ஆண்டு முதலமைச்சரானதும் ஒரு திட்டத்தை அறிவித்தார். அது என்ன திட்டம் என்றால் ? ஏழை – எளிய கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவினை உண்ண வழிவகை செய்ய… அந்த கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் வருவாய் இழப்பினை தடுத்திட…  ஈடு செய்யும் வகையில் 1989 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திட்டம்.

கிட்டத்தட்ட 18000 ரூபாய்.  14,000 ரூபாய் ரொக்கமாகவும்,  4000 ரூபாய் மதிப்புள்ள ஊட்டசத்து பெட்டகம். தாய்க்கும், பிறந்த குழந்தைக்கும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினார் கலைஞர் அவர்கள். இந்த திட்டத்திற்கு கலைஞர் பெயரை வைக்கிறார். அந்த திட்டத்தின் பெயர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டம். கலைஞர் ஏன் அந்த பெயரை வைத்தார் தெரியுமா ? அந்த முத்துலட்சுமி ரெட்டி டாக்டர் தான் இந்தியாவிலேயே முதல் பெண் டாக்டர்.

இங்க இருக்கக்கூடிய…. தமிழகத்தை சேர்ந்த… புதுக்கோட்டையை சேர்ந்தவர். இங்க பக்கத்துல இருக்கக்கூடிய சென்னை மருத்துவக் கல்லூரியில் 1912 ஆம் ஆண்டு சேர்ந்து,  டாக்டர் பட்டம் பெற்றார். அவருடைய பெயரை கேட்கும் போது… அவருடைய வரலாற்றை படிக்கும் போது… நாமும் மருத்துவராக விருப்பப்பட வேண்டும். அந்த ஆசை வர வேண்டும். அந்த கனவு வரவேண்டும்… அந்த பெண்களுக்கு வரவேண்டும் என்பதற்காகத்தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்,  அந்த பெயரை வைத்தார்.

இப்படிப்பட்ட வரலாறு கொண்ட தமிழ்நாட்டில் இருந்து கொண்டு…  இல்லாத அதிகாரத்தை தனக்கு இருப்பதாக நினைத்துக் கொண்டு, நீட் மசோதாவுக்கு நான் கையெழுத்து போட மாட்டேன் என்று ஆளுநர் கூறிக் கொண்டிருக்கிறார். உண்மையா நாம் அதற்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறோம். இதுவரை அதிமுகவில் யாராவது ஒருத்தர், ஒரு கண்டனத்தை விடுங்க…  ஒரு மூச்சாவது விட்டு இருக்காங்களா ? என கேள்வி எழுப்பினார்.