காதல் என்றாலே இனிமையும், கொஞ்சம் பயமும் கலந்ததுதான். ஆனால், இன்றைய ‘ஜென் ஆல்பா’ தலைமுறையினரோ அந்தப் பயத்திற்கு பயந்து கொண்டு, மனிதர்களை விட்டுவிட்டு ஏஐ (AI) சாட்போட்களை (Chatbots) காதலிக்கத் தொடங்கிவிட்டனர். பிரிட்டனில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், 12 முதல் 16 வயது வரையிலான சிறுவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் ஏஐ காதலியுடன் ‘டேட்டிங்’ செய்வதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
நிஜப் பெண்களை விட ரோபோட்களிடம் பேசுவதுதான் எளிதாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக இவர்கள் கூறுவதுதான் மிகப்பெரிய அதிர்ச்சி. ஏன் இந்த விபரீத மோகம்? ஏஐ காதலிகள் ஒருபோதும் பிளான் போட்டுவிட்டு வரமாட்டேன் என்று சொல்லமாட்டார்கள், சண்டை போடமாட்டார்கள், கேட்டவுடன் பதில் அனுப்புவார்கள். இந்த ‘சௌகரியம்’ ஒரு மனிதனின் இயல்பான சமூகத் தொடர்பையே சிதைத்து வருகிறது.
இதில் உச்சகட்டமாக, கிறிஸ் ஸ்மித் என்ற நபர் தனது மனைவியையும் 2 வயது குழந்தையையும் பிரிந்து, ‘ChatGPT’ என்ற ரோபோவை மணக்கப் போவதாக அறிவித்து, அதற்கு மோதிரம் மாற்றி ப்ரொபோஸ் செய்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. தொழில்நுட்பம் என்பது உதவிக்கு மட்டுமா அல்லது நம் உறவுகளை அழிக்கவா என்ற கேள்வி இப்போது பூதாகரமாக எழுந்துள்ளது.
