2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ‘மெகா ஆஃபர்’ மற்றும் திமுகவின் ‘ராஜதந்திர வியூகம்’ என அரசியல் சதுரங்கம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நடிகர் விஜய்யின் த.வெ.க தரப்பிலிருந்து காங்கிரஸிற்கு 100 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி என அதிரடித் தூது அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் கசிந்துள்ள நிலையில், இதனை முறியடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காய்நகர்த்தி வருகிறார்.
அமைச்சரவையில் பங்கு என்ற காங்கிரஸின் நீண்டகாலக் கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்துள்ள திமுக தலைமை, அதற்கு மாற்றாக 25 முதல் 30 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதுடன், சட்டப்பேரவை துணைச் சபாநாயகர் பதவி, 5 முக்கிய அரசு வாரியத் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் இடங்கள் என ‘பவர் ஆஃபர்களை’ வாரி வழங்கியுள்ளது. விஜய்யின் கவர்ச்சிகரமான வாக்குறுதியா அல்லது திமுகவின் கௌரவமான அதிகாரப் பகிர்வா என்ற தர்மசங்கடத்தில் காங்கிரஸ் தலைமை ஆழ்ந்துள்ள நிலையில், ராகுல் காந்தியின் அடுத்தகட்ட முடிவு தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
