சின்னத்திரை நடிகை நிஷா மற்றும் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் இருவரும் கடந்த 2015 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது முறையாக நிஷா கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு வளைகாப்பு விழா நடந்த புகைப்படங்கள் வெளியான நிலையில் ரசிகர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் நிஷாவுக்கு நேற்று பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறி கணேஷ் புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.