தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜவான் திரைப்படம் மாபெரும் வெற்றியை கொடுத்தது. இவர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகள் உள்ளது. இவருடைய காதல் நானும் ரவுடிதான் படத்தை விக்னேஷ் இயக்கிய போது ஆரம்பமாகியுள்ளது. தற்போது இருவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில்  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் நடிக்கும் ‘எல்.ஐ.சி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

இப்படத்தில் ஹீரோவின் அக்கா ரோலில் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் பரவியது. எல்.ஐ.சி பட டைட்டில் சர்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது படத்தில் இருந்து நயன்தாரா விலகி இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு பதில் வேறொரு நடிகையை ஒப்பந்தம் செய்யவும், டைட்டிலை மாற்றவும் விக்னேஷ் சிவன் திட்டமிட்டுள்ளார்.