சமூக வலைதளங்களில் வைரலாகும் ஆசையில் சிலர் எல்லா ஒழுங்குகளையும் மீறி செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவ்வரிசையில், தற்போது வெளியான ஒரு வீடியோ சமூகத்தில் பெரும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.
வெளியாகியுள்ள வீடியோவில், ஒரு பெண் தனது ஊனமுற்ற கணவரை கேலி செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவில், தனது கணவர் ஊன்றுகோலின் உதவியுடன் படுக்கையில் உட்கார முயற்சிக்கும்போது, அந்தப் பெண் கேமரா முன், “கணவரின் காலடியில் சொர்க்கம் இருக்கிறதாம்… ஆனா என் கணவருக்கு கால்களே இல்லையே!” என கூறி சிரிக்கிறார்.
இந்த வார்த்தைகளை கேட்ட கணவர் ஏமாற்றமடைந்த முகத்துடன், “நீங்க ஜோக் பண்றீங்களா?” என்று கேட்பதும், மனைவி தொடர்ந்து சிரிப்பதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. மேலும் இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பலரும் அந்த பெண்ணை விமர்சித்து வருகின்றனர்.
