கோயம்புத்தூரில் வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்த கணவனின் மர்ம உறுப்பை, அவரது மனைவியே ஆத்திரத்தில் துண்டித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிதான் ஹசாரிகா என்பவர் கோவையில் பிளம்பராக பணியாற்றி வந்த நிலையில், தனது மனைவி ஜிந்தியுடன் வசித்து வந்தார்.
மேலும் பிதானுக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருந்ததும், அவர் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்ததும் ஜிந்திக்குத் தெரியவந்துள்ளது. ஒருமுறை ஜிந்தி வீட்டில் இல்லாத நேரத்தில் கணவர் வேறொரு பெண்ணுடன் இருந்ததை நேரில் கண்டதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தன்னை ஊருக்குச் செல்லுமாறு கணவர் மிரட்டியதால் ஆத்திரமடைந்த ஜிந்தி, அவருக்குத் தக்க பாடம் புகட்டத் திட்டமிட்டார். சம்பவத்தன்று இரவு பிதான் மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ஜிந்தி சமையலறை கத்தியால் அவரது மர்ம உறுப்பைத் துண்டித்துவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டுத் தப்பியோடினார்.
இந்த வலியால் அலறிய பிதானின் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த மனைவி ஜிந்தியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
