ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் குடும்பத்தோடு ரேஷன் கடைக்கு வந்து கைரேகை பதிவு செய்ய கட்டாயப்படுத்த கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டு இணைத்துள்ளார்கள் .அதேபோல அவர்களுடைய கைரேகை பதிவு மூலமாகத்தான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் குடும்பத்தோடு கைரேகை பதிவு செய்வதை அரசு கட்டாயமாக்கியது .
ரேஷன் கார்டு ஒரு ஊரில் இருந்தாலும் குடும்ப உறுப்பினர்கள் வெளியூரில் இருக்கும் பொழுது கைரேகை வைப்பது மிகவும் சிரமம். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி, முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களின் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் கடைக்கு வந்து தான் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என்பதை கட்டாயப்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளார்.
