தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகேயுள்ள வடக்கு இலந்தைக்குளத்தை  சேர்ந்தவர் பிச்சை. இவருடைய மகன் சுடலைமுத்து என்ற சுரேஷ் . இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தனது ஊரைச் சேர்ந்த நண்பரின் செல்போனுக்கு சுரேஷ் ஒரு குறுஞ்செய்தி  அனுப்பியுள்ளார். அதில், “என்னுடைய அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க…” என்று மிகவும் உருக்கமாகக் குறிப்பிட்டுவிட்டு, எதிர்பாராதவிதமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குடும்பப் பிரச்சினை அல்லது மன அழுத்தம் காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சுரேஷ் அனுப்பிய மெசேஜைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர் பதறியடித்துக்கொண்டுஅவரது வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, சுரேஷ் தூக்கில் தொங்குவதைக் கண்டு உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதுகுறித்து உடனடியாக கயத்தாறு காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுரேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து, கல்லூரி மாணவர் சுரேஷ் தற்கொலை செய்துகொண்டதற்கான உண்மையான பின்னணிக் காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.