கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஓசூர் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்து மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்பு மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் பல்வேறு மீன் கடைகளில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது 5 கடைகளில் கெட்டுப்போன மீன்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் 75 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அளித்தனர். மேலும் ஐந்து கடை உரிமையாளர்களுக்கும் தலா 2000 ரூபாய் வீதம் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதுபோல தரமற்ற மீன்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.