வாழ்க்கையில் சில நேரங்களில் அறிவியலால் விளக்க முடியாத சில அதிசயங்கள் நடக்கும் என்பதற்கு உதாரணமாக, துப்பாக்கி குண்டு பாய்ந்தும் ஒரு இளைஞன் உயிர் தப்பிய சம்பவம் ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த இளைஞன் பணியில் இருந்தபோது, அவருக்குத் தெரிந்த ஒருவரே திடீரென துப்பாக்கியால் அவரது நெஞ்சுக்கு நேராகச் சுட்டுள்ளார்.

குண்டு நேராக இதயத்தைத் துளைக்கச் சென்ற அந்த நொடியில், அனைவரும் அந்த இளைஞனின் கதை முடிந்துவிட்டது என்றே கருதினர். ஆனால், அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒரு சிறிய உலோகச் சிலுவை லாக்கெட், புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் போலச் செயல்பட்டு தோட்டாவைத் தடுத்து நிறுத்தியுள்ளது. குண்டு அந்த லாக்கெட்டில் மோதியதால் அதன் வேகம் குறைந்து திசை மாறியது, இதனால் இதயம் தப்பியது.

​மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த இளைஞரைச் சோதித்த மருத்துவர்கள், “மருத்துவ ரீதியாக இது நம்ப முடியாத ஒரு அதிசயம்” எனத் தெரிவித்துள்ளனர். அந்த லாக்கெட் மட்டும் இல்லையென்றால், அந்த இளைஞர் மருத்துவமனைக்கு வரும் முன்னரே உயிரிழந்திருப்பார் என எக்ஸ்ரே ரிப்போர்ட்டுகளைக் காட்டி அவர்கள் விளக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.

“கடவுள் இருக்கிறார் என்பதற்கு இதைவிடப் பெரிய ஆதாரம் தேவையில்லை” என ஆயிரக்கணக்கானோர் கமெண்ட் செய்து வருகின்றனர். மரணத்தின் பிடியில் இருந்து மீண்ட அந்த இளைஞன், “இது வெறும் நகை என்றுதான் நினைத்தேன், ஆனால் இது என் உயிரையே காப்பாற்றும் என நினைக்கவில்லை” என கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.