கடலூர் மாவட்டம் பண்ருட்டியில், நிலம் தொடர்பான தகராறைத் தொடர்ந்து, நான்கு பெண்கள் ஒருவர் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பாதிக்கப்பட்ட பெண் ஒரு மரத்தில் கட்டி வைத்து சேலை கிழிக்கப்பட்டு, தலையிழுக்கப்பட்டு, தாக்கப்படுவதைக் காண முடிகிறது. அதேவேளை, அவரை காப்பாற்ற முயன்ற ஒருவரை, தாக்கிய பெண்களில் ஒருவர் கையில் குச்சி ஏந்தி விரட்டும் காட்சியும் பதிவாகியுள்ளது.
அதாவது நிலப் பிரச்சினையில் ஜெயப்பிரதா, ஜெயந்தி மற்றும் அனுராதா ஆகிய மூன்று பெண்கள் சேர்ந்து வயதான மூதாட்டியை தாக்கிய நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்தில் செல்வராணி என்பவர் கொடுத்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து அனுராதா என்பவரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் மீதமுள்ளவர்களை தேடும் பணிகள் நடைபெறுகிறது. மேலும் நிலப் பிரச்சனையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில் பட்ட பகலில் நடந்த இந்த கொடூரத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூதாட்டியை கட்டி வைத்து தாக்குதல் – அதிர்ச்சி காட்சி | Fight | Kumudam News#KumudamNews24X7 #KumudamNews #justnow #cuddalore #oldlady #ladyissue #fight #tnpolice #latestnews pic.twitter.com/KnOGEjHSwC
— Kumudam News 24×7 (@kumudamNews24x7) September 7, 2025
. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
