ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த 59 வயதான நபர் ஒருவர் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள நியூ கலிடோனிய பகுதியில் உள்ள கடற்கரையில் அவர் மகிழ்ச்சியாக நீந்தி கொண்டிருந்தார். அப்போது தீடீரென 4 மீட்டர் நீளம் கொண்ட சுறா மீன் அவரை நெருங்கி கடித்து குதறியது இதனை கண்ட மக்கள் பயந்து அலறியுள்ளனர். உடனடியாக மீட்பு குழுவினர் படகில் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த நபரை சுறாவிடமிருந்து மீட்டு உயிர் காக்கும் சிகிச்சை அளித்துள்ளனர்.

இதனை அடுத்து மீட்பு குழுவினர் அந்த நபரை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்டனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து அவரை தாக்கியது புலி சுறா என அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். இதனை தொடர்ந்து அந்த சுற்றுலா பயணியின் உயிரிழப்பு குறித்து அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.