சமூக வலைத்தளங்களில் இன்றைய காலகட்டத்தில் தினம்தோறும் பொது விதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் குறித்த வீடியோக்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதன்படி தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் சிங்கம் ஒன்று கடற்கரையில் ஜாலியாக பந்து விளையாடிக் கொண்டிருக்கிறது.

அளவில் பெரியதாக இருக்கும் பந்தினை எங்கேயும் அங்கேயும் என ஓடி கட்டுப்படுத்தி உற்சாகமாக பந்து விளையாடிக் கொண்டிருக்கிறது. கடற்கரை காற்றை ரசித்துக்கொண்டே ஓடி ஓடி விளையாடுகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வர பலரும் இதனை ரசித்து வருகிறார்கள்.