கடகம் ராசி அன்பர்களே,

இன்று இறைவழிபாட்டில் ஈடுபடுவதால் மன அமைதி பெறலாம். என்ன செய்யலாம் ஏது செய்யலாம் என்று மனம் அலை பாய்ந்து கொண்டிருக்கும். வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். கொடுத்த வாக்கை கண்டிப்பாக காப்பாற்றுவீர்கள். வீடு மாற்றம் இடமாற்றம் கண்டிப்பாக மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும். இந்த நாள் உங்களுக்கு சத்தான ஆகாரம் முக்கியம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். ஒப்பந்தங்கள் நிறைவேறும். உடன் பணிபுரிபவர்கள் நல்ல பெயர் வாங்கிக் கொடுப்பார்கள். அன்பால் உயரும் நாளாக இருக்கிறது. யாரிடமும் எதிர்த்து பேச வேண்டாம். பெண்கள் இன்று வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்வீர்கள். கணவனிடம் ஏற்பட்ட பிரச்சனை சரியாகும்.

எந்த ஒரு பணியிலும் வெற்றி நிச்சயம். இன்று மாணவர்கள் தொட்டது துலங்கும் நாளாக இருக்கும். நன்மைகள் கண்டிப்பாக நடக்கும். வெளிநாடு சென்று படிக்கும் யோகம் உள்ளது. இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: ஐந்து மற்றும் ஏழு

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்