சிம்மம் ராசி அன்பர்களே,

இன்று எதிலும் தைரியமாக ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கான நல்ல செய்திகள் வந்து சேரும். உபரி பண வருமானம் கண்டிப்பாக வரக்கூடும். வீடு மாற்றம் மகிழ்ச்சியை கொடுக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கூட்டாளிகள் அனுசரணையாக இருப்பார்கள். மனம் இன்று திருப்தி அடையும். கணவன் மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகிவிடும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்.

திருமண முயற்சிகளை மேற்கொண்டால் நல்ல வரன்கள் கிடைக்கும். குடும்பத்தில் நெருக்கம் உண்டாகும். நிதி தொடர்பான விஷயங்களில் கவனமாக இருங்கள். முன் கோபத்தை குறைத்துக் கொள்வது வெற்றிக்கு வழிவகுக்கும். இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி மிக்க நாளாகவே இருக்கும். பெண்களுக்கு காரியங்களில் வெற்றி ஏற்படும். நினைத்த வாழ்க்கையை அற்புதமாக வாழ்வீர்கள்.

இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். கல்வி மீது முழு அக்கறை கொள்ள வேண்டும். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: இரண்டு மற்றும் ஆறு

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்