கன்னி ராசி அன்பர்களே,

இன்று மிகவும் நேர்மையுடன் நடந்து கொள்வீர்கள். செல்வாக்கு மிக்க நாளாக கண்டிப்பாக இருக்கும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். சூழ்நிலையை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. புதிய உற்சாகமும் தன்னம்பிக்கையும் பிறக்கும். நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டு எல்லோர் மத்தியிலும் நல்ல பெயர் எடுப்பீர்கள்.

பாராட்டும் புகழும் கண்டிப்பாக கிடைக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கை ஏற்படும். சமூக சேவையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். லாபகரமாக இந்த நாளை அமைத்துக் கொள்வீர்கள். கவனமுடன் பணிகளை மேற்கொண்டால் வெற்றி காணலாம். தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். இந்த நாள் முன்னேற்றமான நாள். பெண்கள் இன்று எந்த செயலையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

முன் யோசனையுடன் செயல்பட்டு வெற்றி பெற முடியும். முன்கோபம் வேண்டாம். இன்று மாணவர்களுக்கு வெற்றி பெறுவதற்கான சூழல் உள்ளது. பாடங்களை நன்றாக படித்து முன்னேற வேண்டும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: பிரவுன் மற்றும் வெள்ளை நிறம்