துலாம் ராசி அன்பர்களே,

இன்று மாற்றங்கள் ஏற்றங்கள் கண்டிப்பாக இருக்கும். பழகியவர்கள் உங்களுக்கு நட்பு கரம் நீட்டுவார்கள். தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். தன வரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கண்டிப்பாக கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை இருக்கும். ஏற்றுமதி தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் இருக்கும்.

சேவை மனப்பான்மையுடன் இன்று செயல்படுவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பண தேவைகள் பூர்த்தியாகும். மனதில் ஒருவித புத்துணர்ச்சி ஏற்படும். பெண்கள் இன்று அனைவரிடமும் சகஜமாக பேசி பழகுவீர்கள். காரியங்களை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் பணி சுமை இருக்கலாம்.

ஆனால் வெற்றி காண்பீர்கள். இன்று மாணவர்கள் திறமையால் வெற்றி பெற முடியும். கல்வி மீது அக்கறை அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்