மேற்கு வங்கத்தின் பாரக்பூர் படகுத் துறையில் கங்கை நதியில் மூழ்கிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை, உயிரைப் பணையம் வைத்து மீட்ட தன்னார்வலரின் வீரச் செயல் சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 17 அன்று படகில் ஏற முயன்ற நடுத்தர வயதுப் பெண் ஒருவர், எதிர்பாராதவிதமாக கால் தவறி ஆற்றுக்குள் விழுந்தார்.
கங்கை நதியின் வேகமான நீரோட்டத்தில் அவர் சுமார் மூன்று அடி ஆழத்திற்கு மூழ்கியதால் அங்கிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த இக்கட்டான சூழலில், அங்கிருந்த கோரக்ஷா தீட்சித் என்ற குடிமைத் தன்னார்வலர் சிறிதும் தாமதிக்காமல் ஒரு கயிற்றின் உதவியுடன் ஆற்றுக்குள் குதித்தார்.
‘সাইলেন্ট’ হিরো
১৭/১২/২৫, ব্যারাকপুর। সকাল ১০টা নাগাদ দু’পয়সার ফেরিঘাট পেরিয়ে যাওয়ার সময় লঞ্চে উঠতে গিয়ে এক ভদ্রমহিলা দুর্ঘটনাবশত গঙ্গায় পড়ে যান।
তখন সেখানেই ডিউটিরত ছিলেন ব্যারাকপুর কমিশনারেটে কর্মরত সিভিক ভলান্টিয়ার গোরক্ষ দীক্ষিত, যিনি ব্যাপারটি দেখামাত্রই কালবিলম্ব… pic.twitter.com/7kxlU9IluA
— West Bengal Police (@WBPolice) January 9, 2026
“>
மேலும் கங்கையின் கடும் நீரோட்டத்தையும் பொருட்படுத்தாமல் ஆற்றுக்குள் மூழ்கிய பெண்ணை மீட்டு கரைக்கு கொண்டு வந்த கோரக்ஷா தீட்சித்தின் துரித நடவடிக்கையைப் பாராட்டி மேற்கு வங்க காவல்துறை தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த மீட்புப் பணி குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வரும் நிலையில், அந்தப் பெண் தனது உயிரைக் காப்பாற்றிய தன்னார்வலருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். ஆபத்தான நேரத்தில் சமயோசிதமாகச் செயல்பட்ட அந்த இளைஞரின் துணிச்சலை உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
