தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்தவரும் நிலையில் அந்த படம் வருகிற 14-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்நிலையில் அர்ஜுன் லால் என்பவரிடம் ஞானவேல் ராஜா கடன் பெற்ற நிலையில் அதனை திருப்பிக் கொடுக்காததால் சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் அவரிடம் பெற்று 20 கோடி ரூபாயை நவம்பர் 13ஆம் தேதிக்குள் சொத்தாட்சியருக்கு ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் செலுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த பணத்தை செலுத்தாமல் படத்தை வெளியிடக்கூடாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அர்ஜுன் லால் என்பவர் திரைத்துறையில் பலருக்கு கடன் கொடுத்த நிலையில் அவருக்கு நிதி இழப்பு ஏற்பட்டதால் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டார். பின்னர் அவர் இறந்து விட்டதால் பின்னர் அவர் பெயரில் உள்ள சொத்துக்களை உயர்நீதிமன்றத்தில் உள்ள சொத்து ஆட்சியர் நிர்வகித்து அவர் கடன் கொடுத்தவர்களிடமிருந்து கடனை வசூலிக்கும் பணியை செய்து வருகிறார். அந்த வகையில் தான் தற்போது ஞானவேல் ராஜா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.