டைரக்டர் சிவா இயக்கத்தில் சூர்யா இப்போது நடிக்கக்கூடிய படம் “கங்குவா”. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கக்கூடிய இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 3டி முறையில் சரித்திர திரைப்படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் சூர்யா கங்குவா படத்துக்காக உடற்பயிற்சி செய்து தன் உடலை மெருகேற்றி வருகிறார். இதுகுறித்த வீடியோவை படக்குழு சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளது.