வலிமை திரைப்படத்தை அடுத்து தல அஜித் நடிக்கக்கூடிய படத்தை மகிழ்த்திருமேனி இயக்குகிறார். இந்த படத்திற்கு “விடாமுயற்சி” என பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. விடாமுயற்சி படத்தின் சூட்டிங் வரும் மே 22-ம் தேதி சென்னையில் தொடங்க இருப்பதாகவும், அஜித் நேபாள் மற்றும் பூட்டான் பைக் டூரை முடித்தபின் இதில் இணைவார் என்றும் சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி விடாமுயற்சி திரைப்படத்தின் சூட்டிங்கை 70 நாட்கள் எடுக்க திட்டமிட்டு உள்ளதாகவும் இதில் அஜித்தின் பகுதி 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகிது. இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் புது செய்தி இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. அதாவது, அஜித் விடாமுயற்சி படத்தில் 2 வேடங்களில் நடிக்க உள்ளதாகவும் இதற்காக மகிழ் திருமேனி 2 கதாநாயகிகளை தேர்வு செய்யும் பணியில் ஈடுப்பட்டு இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதற்கு முன்பு வாலி, வில்லன் ஆகிய பல படங்களில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.