டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் “கஸ்டடி” படம் இன்று (மே 12) திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.

இந்த திரைப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்து உள்ளனர். இந்த நிலையில் கஸ்டடி படத்தில் நீருக்கடியில் எடுக்கப்பட்ட காட்சிகளின் மேக்கிங் வீடியோவை படக்குழுவானது  வெளியிட்டுஉள்ளது. இந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறது.