போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்வு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, 2016 செப்டம்பர் மாதத்திற்கு முன்னால் ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி 221 சதவீதத்திலிருந்து 257 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, 2016 செப்டம்பர் மாதத்திற்குப் பின்னால் ஓய்வு பெற்றவர்களுக்கு 42 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அதிரடி உயர்வால், ஓய்வூதியர்களுக்குக் குறைந்தபட்சம் ₹2,000 முதல் அதிகபட்சமாக ₹6,000 வரை கூடுதலாகப் பணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வந்த ஓய்வூதியர்கள், தற்போது கையில் கூடுதல் தொகை கிடைப்பதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
