முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் ஆலோசகராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி ‘எம்.ஜி.ஆர் அதிமுக’ என்ற புதிய கட்சியைத் தொடங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக, அதிமுக, பாமக எனப் பல்வேறு கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்த இவர், ஏற்கனவே ‘மக்கள் நல உரிமைக் கழகம்’ என்ற பெயரில் ஒரு கட்சியை நடத்தியவர்.
தேமுதிகவில் இணைந்து 2011-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் முக்கியப் பங்கு வகித்த அவர், பின்னர் 2014-ல் ஜெயலலிதா முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு அவர் புதிய கட்சி தொடங்கவிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
