முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அப்போது அங்கு அஞ்சலி செலுத்தவந்த சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்துக்கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு பன்னீர்செல்வம் எங்கள் கட்சிக்காரர் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரிந்து கிடக்கும் அதிமுக ஒரே அணியாக இணைந்து செயல்பட வேண்டும் என்று சசிகலா மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் கூறிவரும் நிலையில் இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.