இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது . அதிலும் குறிப்பாக நடன வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தற்போது பொது இடங்களில் நடனம் ஆடுவதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அது பலருக்கும் சங்கடத்தை ஏற்படுகிறது. அதாவது மருத்துவமனைகள் மற்றும் வாகன நெரிசல் நிறைந்த சாலைகள் போன்ற இடங்களில் தங்களது திறமையை காட்டி பலரும் நடனம் ஆடுவதால் பலவித சங்கடங்களை அளிக்கின்றது.

இந்த நிலையில் தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் ஓடும் ரயிலில் இரண்டு பெண்கள் நடனம் ஆடுவதை காண முடிகின்றது. அந்தப் பெண்கள் ஆடும் நடனம் அபாரமாக உள்ளது என்றாலும் ஓடும் ரயில் அதற்கான இடம் அல்ல என்பது தான் உண்மை. இந்த பெண்கள் செய்வது இணையவாசிகளுக்கு பிடிக்கவில்லை. தற்போது அந்த வீடியோ வைரலாகி வர பலரும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Jaya Jerry இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@jayajerry8572)