ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற சிறுவன் ஒன்று, தவறி கீழே விழுந்ததால் ரயிலுக்கும் , மேடைக்கும் இடையில் சிக்கிக்கொண்ட அதிர்ச்சிக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் அந்த ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் முழுவதுமாக பதிவாகியுள்ளதாகது. இக்காட்சியை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.

வீடியோவில், சிறுவன் ஒருவர் தனது கையில் பொருட்கள் விற்பனை செய்யும் ட்ரே எடுத்து ஓடும் ரயிலில் ஏற முயல்வது காணப்படுகிறது. அந்த நேரத்தில் திடீரென அவர் கீழே தவறி விழுந்து, ரயில் மற்றும் மேடையின் இடை இடைவெளியில் சிக்குகிறார்.

பலர் அவரது உயிர் பிழைக்கும் வாய்ப்பில்லை என நினைத்த போதிலும், அந்த சிறுவன் தைரியத்துடன் பதற்றமின்றி நிலத்தில்  ஒருபக்கம் சாய்த்து படுத்துக்கொள்கிறான், ரயில் முழுவதும் அவர் மேல் கடந்து சென்று விடுகிறது. ரயில் கடந்த உடனே சுற்றியுள்ளவர்கள் ஓடி வந்து அவரை மீட்கின்றனர்.

“>

 

அதிர்ஷ்டவசமாக, அந்த சிறுவனுக்கு பெரிய காயம் ஏதும் ஏற்படவில்லை என்பதுவே அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் மூலமாக, எந்தவொரு சூழ்நிலையிலும் பயந்து கலங்காமல் தைரியத்துடன் செயல்பட்டால் உயிரைக் காப்பாற்ற முடியும் என்பதற்கு சிறந்த உதாரணமாக உள்ளது. இதேவேளை, ரயில்வே துறை பலமுறை அறிவுறுத்தியதுபோல, ஓடும் ரயில்களில் ஏறுவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கையாகும் வகையில் இந்த வீடியோ அமைகிறது