மத்திய அரசு எரிவாயு விநியோக முறையில் ஒரு மிக முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி, இனி வீடுகளில் குழாய் மூலம் எரிவாயு (PNG) இணைப்பு பெற்றிருப்பவர்கள், வழக்கமான வீட்டு உபயோக சிலிண்டர்களை (LPG) வைத்திருக்கவோ அல்லது புதிய சிலிண்டர்களைப் பெறவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு மானியம் தகுதியானவர்களுக்குச் சரியாகச் சென்றடைவதை உறுதி செய்யவும், எரிவாயு விரயத்தைத் தவிர்க்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குழாய் எரிவாயு வசதி உள்ளவர்கள் தங்களின் பழைய எல்பிஜி இணைப்பைச் சரண்டர் செய்ய வேண்டும் அல்லது அந்த இணைப்பை மானியம் இல்லாத பிரிவுக்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒருவேளை விதியை மீறி சிலிண்டர்களைப் பயன்படுத்தினால், அந்த இணைப்புகள் துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசின் இந்தத் திடீர் அறிவிப்பு, குழாய் எரிவாயு இணைப்பு வைத்துள்ள நடுத்தரக் குடும்பங்களிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.