உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் மனிதாபிமானமே இல்லாத ஒரு கொடூரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், மனமுடைந்த மனைவி தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

அந்தச் சமயத்தில் பதறிப்போய்த் தடுக்க வேண்டிய கணவன், அதைக் கண்டு துடிக்காமல் தனது செல்போனை எடுத்து மனைவியின் தற்கொலை முயற்சியை வீடியோ எடுத்துள்ளார்.

தனது மனைவியைக் காப்பாற்ற எவ்வித முயற்சியும் எடுக்காததோடு, அவர் உயிரிழக்கும் வரை அந்த வீடியோவை எடுத்துக்கொண்டே இருந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அந்தப் பெண்ணின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையின் போது கணவனின் செல்போனைச் சோதித்த போலீசாருக்கு, அவர் தற்கொலையை வீடியோ எடுத்தது தெரியவந்து அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து தற்கொலைக்குத் தூண்டியதாக அந்த நபரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.