சென்னை மாநகர காவல் ஆணையரின் அதிரடி உத்தரவின் பேரில், தலைநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் போலீசார் தீவிர தணிக்கை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த அதிரடி சோதனையில், சென்னையில் மட்டும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 133 ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் (History Sheeters) கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்த சிறப்பு சோதனையில், போதைப்பொருள் விற்பனை தொடர்பாக 101 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடம் இருந்து 21.4 கிலோ கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1,070 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையால் சென்னையில் உள்ள சமூக விரோதிகள் மற்றும் ரவுடி கும்பல் தற்போது பெரும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளது.
